இந்த தமிழ்ப் பாடலைதான் நான் அதிகமாகக் கேட்கிறேன்… கோலி பகிர்ந்த தகவல்!

vinoth

வியாழன், 1 மே 2025 (15:45 IST)
உலகளவில் தற்போது கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து அதிகம் பேரால் சமூகவலைதளங்களில் பின்தொடரப்படும் வீரராக கோலி இருக்கிறார். இதனால் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் நிறைய விளம்பரங்களை செய்து வருகிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் ஒருவராக உள்ளார்.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் கோலி. இந்நிலையில் ஆர் சி பி அணியினருடன் நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் “உங்களுக்கு பிடித்த, நீங்கள் அதிகமுறைக் கேட்கும் பாடல் எது?” என்ற கேள்விக்கு ஒரு தமிழ்ப் பாடலை பதிலாக சொல்லியுள்ளார்.

அதில் “நான் சொல்லும் பதில் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். அது ஒரு தமிழ் பாடல். நீ சிங்கம்தான் என்ற பாடல்தான் அது” எனக் கூறியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்பு நடித்த ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்ற பாடலாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்