மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட வினேஷ் போகத் வழக்கின் தீர்ப்பு!

vinoth

புதன், 14 ஆகஸ்ட் 2024 (07:23 IST)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத எடை கூடுதலாக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  50 கிலோ மல்யுத்த பிரிவில் விளையாடி வந்த அவர் இறுதிப் போட்டிக்கு முன்பாக திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடல் எடை 50 கிலோவுக்குக் கூடுதலாக 100 கிராம் இருந்ததுதான் என சொல்லப்படுகிறது.

இதனால் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றும் அவர் எந்த பதக்கமும் பெறாமல் போனது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கின் தீர்ப்பு முதலில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் இப்போது ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளிவைப்புகள் இந்திய ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்