வினேஷ் போகத் வழக்கு - வெள்ளி பதக்கம் கிடைக்குமா.? நாளை தீர்ப்பு.!!

Senthil Velan

திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (14:38 IST)
தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
 
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ கிலோ எடைப் பிரிவில்  வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற எடை பரிசோதனையில் அவர், 100 கிராம் அதிகமாக இருந்தார். இதனால் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் உத்தரவிட்டனர்.
 
இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தால் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் ஆவது கைப்பற்றி இருப்பார். இந்நிலையில், தனது தக்தி நீக்கத்தை எதிர்த்து சர்வதேச விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டு இருந்தார்.
 
வினேஷ் போகத்தின் மனுவை ஏற்றுக் கொள்ள நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டுன் என முறையிட்டார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது.  இதனிடையே, வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு வழக்கில் 10ம் தேதியே விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக ஆஜரான பிரபல வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, விதுஷ்பத் சிங்கானியா ஆகியோர் தங்களது தரப்பு விளக்கத்தை கொடுத்தனர்.

ALSO READ: ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் காங்கிரசுக்கும் தொடர்பு உள்ளது - ரவிசங்கர் பிரசாத்..!!

இறுதிப் போட்டிக்கு நுழையும் வரையில் சரியான எடையுடன் விளையாடி இருப்பதால், தனக்கு வெள்ளி பதக்கத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று வினேஷ் போகத் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்