ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

Mahendran

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (17:17 IST)
இந்திய அணியின் தலைமை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் தொடர்ச்சியான அணி வாய்ப்புகள் குறித்து பேசியுள்ளார்.
 
ரோஹித், கோஹ்லி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் திறன் குறித்து மதிப்பிடுவது "அறிவுக்கு ஒவ்வாதது" என்று அகர்கர் தெரிவித்தார். அவர்களின் ஆட்டத்தை மதிப்பிடுவது என்பது, அணியில் அவர்களின் இடத்தை தீர்மானிக்கும் சோதனை அல்ல என்று அவர் விளக்கினார்.
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் அவர்கள் ரன்கள் குவிக்க தவறினால், உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அர்த்தமில்லை. அதேபோல, சதம் அடித்தாலும் நிரந்தரமாக இடம் உறுதி என்றும் கருத முடியாது.
 
2027 உலக கோப்பைக்காக இந்திய அணியை தேர்வு செய்ய இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
ரோஹித், கோலி இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கும் நிலையில் அகர்கரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்