‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

vinoth

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (15:29 IST)
டி 20 கிரிக்கெட் போட்டிகளின் வரவால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான ஆதரவு ரசிகர்களிடம் குறைந்து வருகிறது. இந்த இரு வடிவிலானப் போட்டிகளும் நேரத்தை எடுத்துக் கொள்பவை என்பதாலும் டி 20 கிரிக்கெட் போட்டி போல இருக்கை நுனிக்கு ரசிகர்களைக் கொண்டு செல்லாதவை என்பதாலும் இந்த சூழல் உருவாகியுள்ளது.

அதற்கேற்றார் போல உலகம் முழுவதும் ப்ரான்ச்சைஸ் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட அதில் விளையாடவே வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் ‘டெஸ்ட் ட்வண்ட்டி’ என்ற புதிய வடிவம் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஒரு இன்னிங்ஸுக்கு 20 ஓவர்கள் வீதம் 4 இன்னிங்ஸ்கள் என  டெஸ்ட் கிரிக்கெட் போல இந்த டெஸ்ட் ட்வண்ட்டி போட்டிகள் நடக்கவுள்ளன. தொழிலதிபரான கௌரவ் பஹிர்வானி இதை 13 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கானக் கிரிக்கெட்டாக அறிவித்துள்ளார். இந்த வடிவத்துக்கான ஆலோசனைக் குழுவில் ஏபி டிவில்லியர்ஸ், ஹர்பஜன் சிங், மேத்யு ஹெய்டன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்