10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்த வீரர் அமன்.. இதை ஏன் வினேஷ் போகத் செய்யவில்லை?

Mahendran

சனி, 10 ஆகஸ்ட் 2024 (13:44 IST)
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதி போட்டிக்கு  தகுதி பெற்றிருந்த இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவது, 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இதை ஏன் வினேஷ் போகத் செய்யவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற இந்திய வீரர் அமன் ஷெராவத் 57 கிலோ எடை பிரிவில் விளையாட உள்ளார். ஆனால் இவர் 61. 5 கிலோ எடையில் இருந்த நிலையில்,  சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்து 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்து தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தால் பதக்கம் பறிபோனது போல் இன்னொரு பதக்கமும் பறி போகக்கூடாது என்பதற்காக அவருடைய பயிற்சியாளர்கள் மிகவும் கவனமாக அவருக்கு எடைக்குறைப்பு விஷயத்தில் உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ள நிலையில் இதை ஏன் வினேஷ் போகத் செய்யவில்லை, அவரது பயிற்சியாளர்கள் ஏன் அதற்கு முயற்சி எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்