நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லரை கேவலாமாக பேசியதால் பரபரப்பு – வெளியேற்றப்பட்ட ரசிகர்கள்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (12:30 IST)
இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி மைதானத்தில் விளையார்ரு வீரரை இனரீதியாக அவமதித்து பேசிய ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்ட நிலையில் இர்ண்டாவது நாள் தொடங்கி போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஆட்டம் டிரா ஆகும் நிலையில் உள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் இறுதி போட்டியை காண 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டியை காண வந்த ரசிகர்கள் இருவர் நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லரை இனரீதியாக அவமதித்து பேசியுள்ளனர். இது லைவ் ஒளிபரப்பில் தெரிய வந்ததை தொடர்ந்து பலரும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக இரு பார்வையாளர்களையும் மைதானத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்