இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் இந்தியா – அரபு அமீரகம் இடையேயான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அரபு மக்களும், கோல்டன் விசா வைத்துள்ளவர்களும் மட்டுமே சிறப்பு விமானம் மூலமாக அமீரகம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று முதல் அமீரகத்தில் குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு விசா வைத்துள்ளவர்கள் அமீரகத்திற்கு வர அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரபு அமீரகம் செல்லும் முன் அமீரக பரிந்துரைத்துள்ள தடுப்பூசிகளான பைசர் பயோஎன்டெக், ஸ்புட்னிக் வி, கோவிஷீல்டு, சினோபார்ம் இவற்றில் ஏதாவது ஒரு தடுப்பூசியை பயணிகள் இரண்டு டோஸ் செலுத்தி இருக்க வேண்டும்.
மேலும் விமான பயணத்திற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழும் உடன் வைத்திருக்க வேண்டும் என்றும், அமீரகம் வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 24 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.