IPL- 2020; டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு….படம் காட்டுமா பெங்களூர் அணி ?

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (19:33 IST)
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே 2020 ஐபில்  போட்டிகள் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ், அடுத்து, நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பரபரப்பான சூப்பர் ஓவரில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு டாஸ் ஜெயித்த வார்னர் தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.  ஹைதராபாத் அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சாதனை படைக்குமா இல்லை டேவிட் வார்னர் வானவேடிக்கை நிகழ்த்துவாரா என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

இப்போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்