கோலி வந்தா குத்துதான்.. யுவராஜ் பயப்படுவாப்ல! – கலாய் மன்னன் க்றிஸ் கெயில்

திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:29 IST)
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் கெயில் இந்திய அணி வீரர்கள் கோலி மற்றும் யுவராஜ் குறித்து பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இன்று கோலியின் பெங்களூர் அணியும், வார்னரின் ஹைதராபாத் அணியும் மோதிக்கொள்ள உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய க்றிஸ் கெயில் “கோலியும், நானும் பெங்களூர் அணிக்காக விளையாடியது மறக்க முடியாத தருணம். ஆனால் இப்போது நாங்கள் எதிரெதிர் அணியினர். அதனால் கோலி என் பக்கத்தில் வந்தால் என் முழங்கையால் குத்தி தள்ளி விடுவேன்” என விளையாட்டாக சொல்லியுள்ளார்.

மேலும் யுவராஜ் சிங் பவுலிங் பற்றி கேட்டபோது “யுவராஜ் சிங் பவுலரா?” என்று சிரித்துக் கொண்டே கேட்ட அவர், புனே அணியில் இருந்தபோது அதன் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச சொன்னபோது யுவராஜ் களத்தில் நான் இருப்பதால் பிஞ்ச்சை பந்து வீச சொன்னார் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்