இதுவரை நிகழாத ஒரு அதிசயமான டி20 போட்டி நடந்துள்ளது. சையது முஸ்தாக் அலி தொடரில் இன்று நடந்த போட்டியில் மணிப்பூர் மற்றும் டெல்லி அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 121 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி, 18.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பில் 124 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் சிறப்பு அம்சமாக, டெல்லி அணியின் அனைத்து 11 வீரர்களும் பந்து வீசினர். கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஆயுஷ் பதோனி இரண்டு ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
டி20 கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒரு அணியின் அனைத்து வீரர்களும் பவுலிங் செய்த இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறப்பான நிகழ்வு டி20 கிரிக்கெட்டின் வரலாற்றில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.