கப்பு முக்கியம் பிகிலு..! சூதானமாய் தயாராகும் ராயல் சேலஞ்சர்ஸ்! – ஹைதராபாத்தை வீழ்த்துமா?

திங்கள், 21 செப்டம்பர் 2020 (08:48 IST)
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லில் அதிகம் சொதப்பிய அணியாக கிண்டலுக்கு உள்ளாகி வரும் ஆர்சிபி இந்த முறை கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தலைமை வகிக்கும் அணியாக இருந்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கடந்த மூன்று சீசன்களாக அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாத அளவில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வழங்கி வருகிறது. இந்த முறை கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் மிகவும் தீவிரமாக உள்ளது.

ஐபிஎல் ஏலத்தின் போதே ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ், கிறிஸ் மோரிஸ், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். இன்று சன் ரைஸர்ஸுடன் முதலாவது ஆட்டத்தை தொடங்க உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ். முன்னதாக 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ள இந்த அணிகளில் ஆர்சிபி 6 முறையும், சன் ரைஸர்ஸ் 8 முறையும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் ட்ரா ஆனது.

இந்த முறை தொடக்கத்திலேயே வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்கி ஆர்சிபி சர்ப்ரைஸ் கொடுக்கும் என அதன் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்