இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (17:07 IST)
இங்கிலாந்திற்கு எதிரான 2 வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய  அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் நடந்தது. இதில்,  ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இங்கிலாந்து அணி 236  ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

237 ரன்கள் முன்னிலையில்  2 வது இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் இழந்து 230 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. எனவே 468 ரன்கள் என்ற இலக்கை நோக்கி 2 வது இன்னிங்ஸ் தொடங்கிய இங்கிலாந்து நேற்றை ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்தது.

இன்று கடை நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்தனர். இதனால் 113.1 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்