ஆஷஷ் தொடர்: 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

திங்கள், 20 டிசம்பர் 2021 (15:21 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று 473 ரன்கள் குவித்தது என்பதும் இதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 236 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்த நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 239 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது என்பதும் இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 468 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
இந்தநிலையில் 192 ரன்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டதால் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்