குறைந்த பந்துகளில் 1000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (09:01 IST)
சூர்யகுமார் யாதவ் நேற்றைய போட்டியில் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் டி 20 சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார்.

இந்த மைல்கல்லை குறைந்த பந்துகளை எதிர்கொண்டு பெற்ற வீரராக சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்துள்ளார். 1000 ரன்களைக் கடக்க, அவர் 573 பந்துகளையே எடுத்துக் கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்