ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்… சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைக்குமா?

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (15:55 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.

கடந்த ஒரு வருடமாக சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட ஆட்டத்திறனில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் டி 20 போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.இப்போது டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரில் கூட சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் அவரை டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரிஷப் பண்ட் காயம் அடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சூர்யகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்