இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பிருக்கு… கங்குலி சொல்லும் கணக்கு!

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (12:52 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்துள்ள நிலையில் நான்காம் நாள் ஆட்டம் எப்படி செல்ல போகிறது என்பது தெரியவில்லை.

மூன்று நாள் முடிவில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போது இரண்டாம் இன்னிங்ஸில் 123 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெல்வதற்குக் கூட் வாய்ப்பிருப்பதாக பிசிசிஐ முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனுமான சவுரவ் கங்குலி கூறியுள்ளார். அவர் பேசும்போது “இந்த போட்டியில் ஆஸி அணி 370 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால் , இந்திய அணி வெல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் நம்மிடம் உலகின் மிகச்சிறந்த சேஸிங் பேட்ஸ்மேனான கோலி இருக்கிறார். மேலும் பல சிறந்த வீரர்களும் இந்திய அணியில் உள்ளனர். அதனால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்