இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது. ஹிருடாய் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இந்திய தரப்பில், முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து, 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ஷுப்மன் கில்லின் அபாரமான சதத்தால் எளிதாக வெற்றியைப் பெற்றது.
ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ஷுப்மன் கில் பேசும்போது “இது ஐசிசி தொடரில் நான் எடுக்கும் முதல் சதம். முதலில் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிப்பது சிரமமாக இருந்தது. அதனால் இறங்கி வந்து அடித்தேன். நானும் விராட் கோலியும் விளையாடும் போது சிங்கிள் எடுக்கவே தடுமாறினோம். ஆடுகளம் அப்படி இருந்தது. அதன் பின்னர் ட்ரஸ்ஸிங் ரூமில் இருந்து எங்களுக்கு ஒரு உத்தரவு வந்தது. யாராவது ஒருவர் கடைசிவரை நின்று போட்டியை முடிக்கவேண்டும் என்று. அதன்படியே நடந்துகொண்டோம்” எனக் கூறியுள்ளார்.