மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

Siva

ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (22:18 IST)
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடந்த போட்டியில் இந்தியா கடைசி வரை போராடி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. 289 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய போது ஸ்மிருதி மந்தனா மிக அபாரமாக விளையாடி 88 ரன்கள் எடுத்தார்.
 
அதேபோல் கேப்டன் கவுர் 70 ரன்களும் தீப்தி சர்மா 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்தியா மிக எளிதில் வெற்றி பெற்று விடும் என்று நிலை இருந்தது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் மட்டுமே எடுத்ததால் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது இந்தியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்