ஆடம் ஸாம்பா பெயரில் அஸ்வினிடம் மோசடி நடத்த முயன்ற நபர்..!

vinoth

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (09:40 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின்,  இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்- கவாஸ்கர் தொடரோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு விளையாடிய அதில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது அஸ்வின் ஆஸ்திரேலியாவின் டி 20 லீக் தொடரான பிக்பாஷ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் வெளிநாட்டு தொடர்களில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவில்தான் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பாரோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அஸ்வின் தற்போது தனக்கு நடந்த ஒரு மோசடி முயற்சி சம்பவத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பாவின் பெயரில் அவருக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு மெஸேஜ் வந்துள்ளது. அதில் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களான அபிஷேக் ஷர்மா, உள்ளிட்ட வீரர்களின் செல்போன் எண்ணை இழந்துவிட்டதாகவும் அதனால் அதை அனுப்பும்படியாகவும் கேட்டுள்ளார்.

ஆனால் இது ஒரு சைபர் மோசடி முயற்சி என்பதை அறிந்த அஸ்வின் அவரை சீண்டும் விதமாக உங்களுக்காக எல்லா நம்பர்களையும் ஒரு XL ஷீட்டில் போட்டு அனுப்புகிறேன். தோனியின் நம்பர் வேண்டுமா? எனக் கேட்டுள்ளார். அதன் பின்னர் அந்த நபர் அஸ்வினுடனான உரையாடலைத் துண்டித்துக் கொண்டு நழுவியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்