ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

vinoth

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (13:53 IST)
கோலிக்குப் பிறகான இந்தியக் கிரிக்கெட்டின் முகமாக ஷுப்மன் கில் இருக்க வேண்டும் என பிசிசிஐ நினைக்கிறது. அதனால் அவரை மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட வைக்கிறது. ஏற்கனவே அவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக்கப்பட்டுவிட்டார்.

டி 20 போட்டிகளிலும் அவர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி 20 போட்டிகளில் ஷுப்மன் கில் பெரியளவில் செயல்படவில்லை. அவரை விட ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனாலும் ஷுப்மன் கில் ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றார்.

அவருக்காக சஞ்சு சாம்சன் பின் வரிசையில் இறங்க வேண்டி வந்தது. இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில்லின் தேர்வு கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கில்லை அணியில் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் ஆனால் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கில்லை உள்ளேக் கொண்டு வரும் முடிவில் உறுதியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்