மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம்…!

vinoth

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (08:38 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை. இத்தனைக்கும் அந்த அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகீன் ஷா அப்ரிடி ஆகிய உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் அணிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் என்று சொல்லப்படுகிறது.  அணிக்குள் வீரர்களுக்குள் ஒற்றுமையில்லாமல் குழு குழுவாக பிரிந்து செயல்படுவதாக சொல்லப்படுகிறது அந்த அணிக்கு தற்காலிகமாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கேரி கிரிஸ்டன் கூட இதைப் பற்றி புலம்பியிருந்தார்.

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. அதையடுத்து இப்போது அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி புதிய கேப்டனாக ஒருநாள் போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்