மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

Siva

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (10:14 IST)
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், அரையிறுதிக்கு முன்னேற இந்தியப் பெண்கள் அணி கடும் சவாலை எதிர்கொள்கிறது. 
 
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், எஞ்சியுள்ள ஒரே ஒரு இடத்திற்காக இந்தியா, நியூசிலாந்து , இலங்கை ஆகிய 3 அணிகள் போட்டியிடுகின்றன.
 
இந்திய அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியா தனது அடுத்த போட்டிகளான நியூசிலாந்து (அக். 23) மற்றும் வங்கதேசத்துடன் (அக். 26) இரண்டிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே (8 புள்ளிகளுடன்) எளிதாக அரையிறுதிக்கு செல்ல முடியும்.
 
மாறாக, ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும், மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். 5வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும், இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்பை பெறும் நிலையில் உள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்