சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இதனை அடுத்து அந்த அணி பேட்டிங்கில் களமிறங்கிய நிலையில் முதல் ஓவரில் ஒரு விக்கெட்டையும் இரண்டாவது ஓவரில் ஒரு விக்கெட் இழந்து இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் தத்தளித்து வருகிறது.
முதல் ஓவரை வீசிய ஷமி ஒரு விக்கெட் எடுத்த நிலையில் இரண்டாவது ஓவரை வீசிய ராணா இன்னொரு விக்கெட் எடுத்தார். இந்த நிலையில் இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு: