3 விக்கெட்டுக்களை இழந்தது ஆஸ்திரேலியா.. இந்தியா பக்கம் சாயுமா போட்டி?

புதன், 7 ஜூன் 2023 (17:58 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து ஆஸ்திரேலியா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 
 
ஆட்டத்தில் நான்காவது ஓவரிலேயே முதல் விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா தற்போது வார்னர் மற்றும்  லாபு சாஞ்ஜே ஆகியோர்களின் விக்கெட்டுகளையும் இழந்தது
 
வானர் 43 ரன்களும், லாபுசாஞ்ஜே 26 ரன்களும் அடித்துள்ளனர். தற்போது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஹெட் ஆகியோர் விளையாடி வருகின்றனர் 
 
இந்திய அணியை பொருத்தவரை சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்தியா பக்கம் ஆட்டம் சாய்ந்து கொண்டிருப்பதாக வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்