ஏலத்தில் ‘unsold’.. தற்போது அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் – ஷர்துல் தாக்கூர் அசத்தல்!

vinoth

வெள்ளி, 28 மார்ச் 2025 (08:11 IST)
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மெஹா ஏலத்தில் ஷர்துல் தாக்கூர் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாதது, ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்பட்டது. முதலில் சென்னை அணிக்காக விளையாடிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மெஹா ஏலத்தில் கே கே ஆர் அணியால் வாங்கப்பட்டார். அதன் பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் மினி ஏலத்தில் சி எஸ் கே அணிக்கே திரும்பினார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடங்கும் சில நாட்களுக்கு முன்னதாக அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இனைந்தார். அந்த அணியில் இடம்பெற்றிருந்த மோசின் கான் காயம் காரணமாக விலக, அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரை அந்த அணி வாங்கியது. தற்போது இரண்டு போட்டிகளின் முடிவில் அவர் 6 விக்கெட்கள் வீழ்த்தி பர்ப்பிள் கேப்பைப் பெற்றுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள அவர் “கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம்தான். ஏல நாள் எனக்கானதாக இல்லாமல் போனது. அதனால் எந்த அணியும் என்னை எடுக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக லக்னோ அணி வீரர்கள் காயமடைந்ததால் கடைசி நேரத்தில் எனக்கு ஜாகீர் கான் மூலமாக இந்த வாய்ப்புக் கிடைத்தது. எல்லோருக்குமே திறமை இருக்கிறது. ஃபார்மும், அந்த நாளும் நமக்கானதாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்