இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எல்லா போட்டிகளும் அதிக ரன்கள் சேர்க்கும் போட்டிகளாக அமைந்து வருகின்றன. 200 ரன்கள் என்பது தற்போது மிகவும் சாதாரண ஒரு இலக்காக மாறியுள்ளது. அதற்கு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒவ்வொரு விதிகளும் மாற்றப்படுவதே காரணம் என்று சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக பவுலர்கள் அவ்வப்போது தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
இப்போது அந்த பட்டியலில் சி எஸ் கே அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வினும் இணைந்துள்ளர். அவர் “கூடிய விரைவில் ஐபிஎல் தொடரில் பந்துவீசும் வீரர்களை உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் சென்று அவர்களுக்கு உளவியல் ஆலோசனை கொடுக்க நேரிடும். ஏனென்றால் பந்துவீசவே மிகவும் சிரமமாக உள்ளது. வீரர்கள் ஃபுல்டாஸ் பந்துகளை மட்டுமே வீச வேண்டியுள்ளது. பந்தை பிட்ச் செய்தால் அது பேட்மேஸ்களுக்கு ரன்கள் சேர்க்க ஏதுவாக அமைகிறது” எனக் கூறியுள்ளார்.