இந்நிலையில் ஐபிஎல் திருவிழா சில தினங்களுக்கு முன்னர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. அதையடுத்து மொத்தம் 13 மைதானங்களில் விறுவிறுப்பாக போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எல்லா போட்டிகளும் அதிக ரன்கள் சேர்க்கும் போட்டிகளாக அமைந்து வருகின்றன. 200 ரன்கள் என்பது தற்போது மிகவும் சாதாரண ஒரு இலக்காக மாறியுள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பவுலரான ரபாடா கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் சமமின்மை குறித்து பேசியுள்ளார். அதில் “இம்பேக்ட் ப்ளேயர் விதி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. எல்லா பிட்ச்களும் தட்டையாக அமைக்கப்பட்டு, எல்லா போட்டிகளும் அதிக ரன்கள் சேர்க்கும் ஒன்றாக மாறிவருகின்றன. இப்படியே சென்றா கிரிக்கெட் என்பதை மாற்றும் பேட்டிங் என்றுதான் இந்த விளையாட்டுக்குப் பெயர் வைக்க வேண்டி வரும்” எனக் கூறியுள்ளார்.