என்னை ட்ரேட் செய்யுங்க.. இல்லன்னா ஏலத்தில் விட்டுடுங்க – ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு கோரிக்கை!

vinoth

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (07:46 IST)
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் சஞ்சு சாம்சன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினாலும் இந்த தொடரில் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார்.

மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் உலவ ஆரம்பித்தன. அவரை சிஎஸ்கே அணி வாங்கலாம் என்ற விருப்பத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் மினி ஏலத்துக்கு முன்பாக தன்னை வேறு அணியிடம் ட்ரேட் செய்யவோ அல்லது ஏலத்தில் விட்டுவிடவோ சொல்லி ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்