சஞ்சு சாம்சனை ட்ரேட் செய்ய ஆர்வமாக உள்ளோம்… சிஎஸ்கே நிர்வாகத்திடம் இருந்து வெளியான தகவல்!

vinoth

புதன், 2 ஜூலை 2025 (07:52 IST)
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் சஞ்சு சாம்சன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினாலும் இந்த தொடரில் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார்.

மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் உலவ ஆரம்பித்தன. அவர் சி எஸ் கே அணியில் இணையப் பேச்சுவார்த்தை நிலவுவதாக கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் சி எஸ் கே அணி ட்ரேட் மூலம் வீரர்களை வாங்குவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது. அதனால் அப்படி நடக்காது எனவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது சி எஸ் கே அணி சஞ்சு சாம்சனை ட்ரேட் செய்ய ஆர்வமாக உள்ளதாக அந்த அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கெட் கீப்பர், தொடக்க ஆட்டக்காரர் என பல பரிணாமங்கள் கொண்ட அவரை ட்ரேட் செய்ய சென்னை அணி ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்