மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகி சி எஸ் கே அணியில் இணையப் பேச்சுவார்த்தை நிலவுவதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இந்நிலையில் சி எஸ் கே நிர்வாகி ஒருவர் சஞ்சு சாம்சனை ட்ரேட் செய்ய அணி நிர்வாகம் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளதால் இந்த தகவலின் உண்மைத் தன்மை அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் சஞ்சு சாம்சனை அணியின் உள்ளேக் கொண்டு வருவதே ருத்துராஜைக் கழட்டிவிடதான் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சீசனில் அவர் காயம் காரணமாக விலகினார். ஆனால் தோனிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அதனால் சஞ்சு சாம்சன் வந்தால் தோனிக்குப் பிறகு கீப்பராகவும், ருத்துராஜுக்குப் பதில் கேப்டனாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என சிஎஸ்கே திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.