இரத்தக்கசிவு தொடர்ந்து வருவதால் அவசரமாக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் விரைவில் நலம் பெற பிரார்த்தித்து வருகின்றனர். ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் கட்டமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அவரின் ஃபோட்டோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தனக்காகப் பிராத்தித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் “நான் இப்போது ஒவ்வொரு நாளும் குணமாகி வருகிறேன். எனக்காகக் கிடைத்து வரும் ஆதரவுக்காக நான் சந்தோஷமடைகிறேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் நினைவுகளில் என்னை வைத்துக் கொள்வதற்கு நன்றி.” எனக் கூறியுள்ளார்.