மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

Mahendran

வியாழன், 30 அக்டோபர் 2025 (17:52 IST)
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி வருகிறது.
 
முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஃபோபி என்ற வீராங்கனை 119 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடினார். அதனை தொடர்ந்து எல்லீஸ் என்ற வீராங்கனை 67 ரன்கள் எடுத்து இன்னும் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.
 
சற்று முன் வரையான நிலவரப்படி, ஆஸ்திரேலிய அணி 36 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த தொடரில் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணி இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று வெல்லும் அணி இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதும்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்