மும்பை இந்தியன்ஸோடு 12 ஆண்டுப் பயணம்… ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (09:05 IST)
ஐபிஎல் தொடரில் இணைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து ரோஹித் ஷர்மா பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக அதிகக் கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்பட்டார். இதன் மூலம் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமானக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் நுழைந்து 12 ஆண்டுகள் முடிந்துள்ளதை குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் “ மும்பை இந்தியன்ஸோடு இணைந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டதை இன்னும் நம்ப முடியவில்லை. இது என் குடும்பம்.  அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்