பிசிசிஐ குறித்து மறைமுக விமர்சனத்தை வைத்த ரோஹித் ஷர்மா… அப்படி என்ன சொன்னா?

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (09:26 IST)
இந்திய அணி பரிதாபகரமாக பங்களாதேஷ் அணியிடம் தொடரை இழந்துள்ளது.

தோனிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா, தன் தலைமையில் பங்களாதேஷ் அணியிடம் ஒரு நாள் தொடரை இழந்துள்ளது. இந்த தொடருக்கு பல அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்களோடு சென்றது தோல்விக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் பூம்ரா, ஷமி மற்றும் ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர். இந்த போட்டியிலும் கூட தீபக் சஹார் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரும் காயம் அடைந்து வெளியேறினர். இந்நிலையில் அணியில் வீரர்கள் காயம் அடைவது குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா “சில வீரர்கள் காயம் அடைந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதைப் புரிந்துகொள்வது முக்கியம் என்பதால், அவற்றை முயற்சி செய்து கண்காணிக்க வேண்டும். வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட வரும்போது, ​​100 சதவீதத்துக்கு மேல் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அரைகுறை உடல் தகுதியுடன் நாட்டிற்காக விளையாட ஆட்கள் வரக்கூடாது என்பதால் அவர்களின் பணிச்சுமையை நாம் கண்காணிக்க வேண்டும். “ எனக் கூறியுள்ளார்.

மேலும் இதன் மூலம் வீரர்களை அதிக போட்டிகளில் பிசிசிஐ விளையாட வைக்கிறது என்பதை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்