இந்தியாவில் மிகப் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் தனுஷ் முதலிடம்!

புதன், 7 டிசம்பர் 2022 (16:04 IST)
இந்தியாவில் பிரபலமானவர்களின் பட்டியலில்  நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான ஐஎம்டிபியின் இந்தியாவின் மிகப் பிரபலமான  நடிகர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

ALSO READ: ஓஹோ ஹோ அப்படி போகுதா? சாய்பல்லவியின் கட்டுப்பாட்டில் தனுஷ்!
 
அதில்,  நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.  2 வது இடத்தில், ஆர்.ஆர்.ஆர் பட நடிகையும்,  சமீபத்தில் ரன்பீர் கபூரை திருமணம் செய்தவருமான ஆலியா பட் உள்ளார்.  3 வது இடத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயும்,  5 வது இடத்தில், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தாவும் இடம்பிடித்துள்ளனர்.

மேலும், புஷ்பா பட புகழ் அல்லு அர்ஜூன் 9 வது இடத்திலும், கேஜிஎஃப் நடிகர் யஷ் 10 வது இடத்தில் உள்ளனர்.

 Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்