ரோஹித்தும் ஹர்திக்கும் ஏன் விளையாடவில்லை…. ஜெயவர்த்தனே விளக்கம்!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (11:00 IST)
மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கடந்த போட்டியில் விளையாடவில்லை.

ஐபிஎல் போட்டிகள் இப்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் விளையாடவில்லை.

இதுகுறித்து இப்போது பேசியுள்ளார் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே. அதில் ‘ஹர்திக் பாண்ட்யாவுக்கு பயிற்சியின் போது லேசான தசைப் பிடிப்பு ஏற்பட்டது. ஆனால் அதோடு விளையாடி மேலும் காயத்தை அதிகமாக்க வேண்டாம் என எண்ணி அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதே போல ரோஹித் ஷர்மா டெஸ்ட் தொடரில் விளையாடி வந்திருப்பதால் அவர் டி 20 மனநிலைக்கு மாறுவதற்காக இந்த ஓய்வு அளிக்கப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்