சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

vinoth

சனி, 26 ஏப்ரல் 2025 (16:28 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில மாறுதல்களை செய்த போதும் பேட்டிங்கில் அது எந்த வகையிலும் பலனளிக்கவில்லை. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த சீசனில் சென்னை அணித் தங்கள் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ஐந்து முறைத் தோற்றுள்ளது. இதுவரை எந்தவொரு சீசனிலும் இப்படி அதிகபட்சத் தோல்விகளை சந்தித்ததில்லை. இந்நிலையில் சி எஸ் கே அணியின் முன்னாள் வீரர் ரெய்னா தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “இனிமேல் சி எஸ் கே வீரர்கள் இந்திய அணியில் விளையாடப் போவதில்லை. ஒரு காலத்தில் சி எஸ் கே வில் ஒரு வீரர் இருந்தால் அவர் கண்டிப்பாக இந்திய அணியை ஜெர்ஸியை அணிவார். அதுபோல சி எஸ் கே அணிக் கண்டிப்பாக ப்ளே ஆஃப் செல்லும். ஆனால் இப்போது நிலைமை வேறாகிவிட்டது” எனப் புலம்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்