‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

vinoth

சனி, 26 ஏப்ரல் 2025 (08:44 IST)
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் கடந்த சீசன் முழுவதும் அவரை விளையாட வைகக்வே இல்லை. இந்நிலையில் இந்த சீசனில் சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் எந்த போட்டியிலும் அவர் முழுமையாக 4 ஓவர்கள் பந்துவீசவே இல்லை. அதன் பின்னர் அவருக்கு கடைசியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரை ஒரு நிலக்கரிச் சுரங்கம் என்றும் அதைத் தோண்டினால் வைரம் கிடைக்காது என்றும் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியிருந்தார். இது கிரிக்கெட் உலகில் பெரியளவில் சர்ச்சைகளை உருவாக்கியது.

ஆனால் இப்போது அர்ஜுனை ஒரு மூன்று மாதம் யுவ்ராஜ் சிங்கிடம் பயிற்சிக்கு அனுப்பினால் அவர் கிறிஸ் கெய்ல் போல வருவார் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “அர்ஜுனை நான் பந்துவீச்சில் குறைவாகவும், பேட்டிங்கில் அதிகமாகவும் கவனம் செலுத்தக் கூறியுள்ளேன். அர்ஜுன் மூன்று மாதங்கள் யுவ்ராஜ் சிங்கிடம் ட்ரெய்னிங் பெற்றால் கிறிஸ் கெய்ல் போல வருவார். அதற்கு நான் பந்தயம் கட்டுகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்