இந்தியாவுக்கு 22 கோடி டோஸ் தடுப்பூசி - மீண்டும் துவங்குமா ஏற்றுமதி?

புதன், 22 செப்டம்பர் 2021 (09:40 IST)
அடுத்த மாதம் 22 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு வழங்கப்படும் என  சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்ததுடன், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதையும் நிறுத்தி வைத்தது.
 
இந்நிலையில் அடுத்த மாதம் சுமார் 22 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு வழங்க உள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளது. இதனால் மத்திய அரசு மீண்டும் உபரி தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்