கவனம் ஈர்த்த கைல் ஜாமிசனின் புகைப்படம்…. இணையத்தில் வைரல்!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (10:53 IST)
பெங்களூர் அணியின் கைல் ஜாமிசன் அந்த அணியின் மசாஜிஸ்ட் ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் நியுசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜேமிசன் பெங்களூர் அணியால் 15 கோடிக்கு எடுக்கப்பட்டார். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவருக்கு இவ்வளவு தொகையா என அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள். வளரும் ஆல்ரவுண்டராக அறியப்படும் அவருக்கு இவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது குறித்து அவரே ஆச்சர்யம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சீசனில் அவர் இன்னும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தைக் காட்டவில்லை. இந்நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. அதில் மெல்லிய சிரிப்போடு அணியின் மசாஜ் தெரப்பிஸ்ட்டை பார்க்கும் படி உள்ளது. உடனே இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பல்வேறு யூகங்களை தெரிவித்து பரப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்