11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

vinoth

வியாழன், 8 மே 2025 (09:29 IST)
நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் சி எஸ் கே மற்றும் கே கே ஆர் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் கே கே ஆர் அணி முதலில் ஆடி 179 ரன்கள் சேர்க்க, அடுத்து ஆடிய சி எஸ் கே அணி 20 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த சீசனில் சி எஸ் கே அணியின் மூன்றாவது வெற்றி இதுதான்.

இந்தப் போட்டியில் இலக்கைத் துரத்திய சென்னை அணி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினாலும் அடுத்தடுத்து 5 விக்கெட்களை பவர்ப்ளே ஓவர்களிலேயே இழந்தது. இதன் காரணமாக சென்னை அணி தோல்வி அடைந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் உர்வில் படேல் மற்றும் டிவால்ட் பிரவிஸ் ஆகியோரின் அதிரடிக் காரணமாக சென்னை அணி வெற்றி பெற்றது. அதிலும் சென்னை அணியில் மாற்று வீரராக வந்து இணைந்த உர்வில் படேல் 11 பந்துகளை சந்த்து 31 ரன்கள் சேர்த்தார். அவரின் இந்த அதிரடி இன்னிங்ஸில் 4 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடக்கம். இந்த அதிரடி இன்னிங்ஸ் மூலம் சென்னை அணியின் பின் வரிசை பேட்டிங்குக்கு ஒரு நல்ல அதிரடி வீரர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கையை அவர் ஏற்படுத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்