இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் 5 விக்கெட்களை இழந்து தடுமாறினாலும், பின்னர் டிவால்ட் பிரவிஸ் மற்றும் உர்வில் படேல் ஆகியோரின் அதிரடியால் 23 நாட்களுக்குப் பிறகு வெற்றியை ருசித்தது.
இந்த போட்டி முடிந்ததும் சி எஸ் கே அணிக் கேப்டன் தோனியின் அடுத்த சீசன் விளையாடுவீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு தன் பாணியில் “எனக்கு இப்போது 43 வயதாகிவிட்டது. நான் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிவிட்டேன். இதுதான் என்னுடையக் கடைசி சீசனா என்று தெரியாது. ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் இரண்டு மாதங்கள்தான் விளையாடுகிறேன். அடுத்த 8 மாதங்கள் ஐபிஎல்க்கு தயாராகும் போது என் உடல் இந்த அழுத்தத்தைத் தாங்குகிறதா என்று பார்க்கவேண்டும். இப்போது ஓய்வு குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.