ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் 17 ஆவது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. அதையடுத்து சில நாட்களாக விறுவிறுப்பாக போட்டிகள் நடந்து வருகின்றன. அனைத்து அணிகளும் ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில் இந்த வாரத்தில் இரண்டாவது போட்டிகளில் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் இந்த சீசனின் ஒன்பதாவது போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்க, அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.