அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். மற்றொரு வீரரான அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரும் பும்ரா ஓவரை தவிர அனைவரின் ஓவரிலும் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக வான வேடிக்கை காட்டினர். இதனால் ஒரு கட்டத்தில் அந்த அணியின் ரன்ரேட் 13 க்கு மேல் சென்றது.
இவர்கள் அவுட் ஆனதும் அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசன் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிளாசன் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 277 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோரானது ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராகும்.