அடுத்த கப் நம்தே… ஆர் சி பியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்!

vinoth
வியாழன், 23 மே 2024 (07:00 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனில்  நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதையடுத்து பேட்டிங் ஆடவந்த ஆர் சி பி அணி ஆரம்பத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. இதனால் அந்த அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 33 ரன்களும், ரஜத் படிதார் 34 ரன்களும் சேர்த்தனர்.  இதனால் ஆர் சி பி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 

இதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது. அதனால் அந்த அணி 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர் சி பி அணி மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்