சி எஸ் கேவில் ஒதுக்கப்படும் தமிழக வீரர்கள்.. ஐபிஎல் தொடரில் விளையாடும் ப்ளேயர்ஸ் லிஸ்ட்

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (08:01 IST)
நேற்று சட்டப்பேரவையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு அவர் காரணமாக சொன்னது “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும். அந்த அணியில் தமிழர்களே இல்லை. தமிழர்களே இல்லாத அணியை விளம்பரம் செய்து லாபம் ஈட்டுகின்றனர்” என்று பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் வணிக நோக்கமே பெரிது என்பதால் பெரும்பாலும் எல்லா அணிகளிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான் நீடிக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் பட்டியல்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் விஜய் சங்கர், சாய் சுதர்சன் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் விளையாடுகின்றனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடுகின்றனர். கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் விளையாடுகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அஸ்வின் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் விளையாடுகின்றனர். பெங்களூர் அணியில் தினேஷ் கார்த்திக் விளையாடுகிறார். பஞ்சாப்பில் ஷாருக் கான் விளையாடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்