கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

vinoth

சனி, 19 ஜூலை 2025 (07:55 IST)
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும், போட்டியை ஏதோ ஒரு விஷயத்தில் தவறு செய்து கோட்டை விடுகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோற்றுள்ளது.

இந்த தொடரின் மூலம் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஷுப்மன் கில், ஆக்ரோஷமானக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதே நேரம் அவரின் பேட்டிங் செயல்பாடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஆனால் வர்ணனையாளரும் முன்னாள் இந்திய வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தற்போது ஷுப்மன் கில்லைக் கோலியுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

அதில் “கோலி எதிரணியினரிடம் ஆக்ரோஷமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும் பேட்டிங்கில் கவனம் செலுத்தி அதிக ரன்களை சேர்ப்பார். ஆனால் லார்ட்ஸ் டெஸ்ட்டில் கில்லிடம் ஆக்ரோஷம் இருந்தது. ஆனால் அந்த ஆக்ரோஷம் பேட்டிங்கில் இரண்டாவது இன்னிங்ஸில் வெளிப்படவில்லை” எனக் கூறியுள்ளார். இந்த தொடரில் கில் சுமார் 700 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்