இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால் இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.
இந்நிலையில் சற்று முன்னர் இந்த போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் சாண்ட்னர் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இந்திய அணி இன்று நான்கு சுழலர்களைக் கொண்டு விளையாடுகிறது.