இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால் இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.
அதனால் இரு அணிகளும் துபாய்க்கு செல்ல இந்தியாவை எதிர்கொள்ளப் போகும் அணி அங்கேயே தங்கும் எனவும், நியுசிலாந்தை எதிர்கொள்ளப் போகும் அணி மீண்டும் பாகிஸ்தான் வந்து லாகூரில் விளையாடும் எனவும் சொல்லப்படுகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் ஹைபிரிட் மாடலில் நடப்பதால் இந்த நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன.